சென்னை: டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பிரதமர் மோடியை மதியம் 1மணி அளவில் சந்தித்து பேசினார். அப்போது, திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்ததுடன், தமிழ்நாடு சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தார். அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் சந்தித்து பேசினார்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அறிவாலயம் ஏப்ரல் 2ந்தேதி திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினருக்கும் திமுக சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி சென்றார். அதைத் தொடர்ந்து இன்று மதியம் 1மணி அளவில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

தொடர்ந்து,   மதியம் 1.45 மணி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிமுதல்வர் சந்திக்க உள்ளார்; பிற்பகல் 3.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், மாலை 4.30 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் அவர்களது அறைகளில் சந்தித்து பேசுகிறார்.

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர், அங்கு திமுக எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களையும் சந்தித்து பேசினார்.