டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலக திறப்புவிழாவில் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் திமுக எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சி தலைவர்களையும்  சந்தித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை கொண்ட 3வது பெரிய கட்சியாக திமுக திகழ்கிறது. இதனால் நாடாளுமன்ற வளாகத்துக்குள் திமுக எம்.பி.க்களுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்கும் முதல்வர், அங்குள்ள அறையில் அமர்ந்து திமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

அப்போது திடீரென அங்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் திமுக எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் சந்தித்து, திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மதிய இடைவேளையின்போது திமுக எம்.பி.க்களை ஸ்டாலின் நாடாளுமன்ற மத்திய மண்டபத்துக்கு சென்று சந்தித்தார். மேலும் எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்களை வைரலாகி வருகிறது.