சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இனறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புடன், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை உடனடியாக தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது மத்தியஅரசு  மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் காலம் தாழ்த்துவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்ட்யுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடருக்காக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகளை விதி 110ன் கீழ் வெளியிட்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய அமர்வில்,   ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புடன், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை உடனடியாக தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி மாநிலங்களவையில் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த  தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் , “சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்படி நடத்தும்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும். விதிகளின்படி சாதிவார் கணக்கெடுப்பில் உள்ள சில விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது. மக்கள் தொகை, சாதி வாரி கணக்கெடுப்பு போன்றவற்றை மத்திய அரசே முழுமையாக மேற்கொள்ள முடியும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. 2021 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கொரோனா உள்ளிட்ட காரணங்களை காட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தவில்லை. சம வாய்ப்பு, கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம் அவசியமாக இருக்கிறது. ” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

இதையடுத்து அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்தின்மீது தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். . இதைத்தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட உள்ளது.