சென்னை:
டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) மேகாலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில் விஸ்வா உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து,அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:
“எங்கள் இளம்,நம்பிக்கைக்குரிய டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வ தீனதயாளனின் இதயத்தை உடைக்கும் அகால மரணம் பற்றி கேள்விப்பட்டு வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியுற்றேன்.அவர் ஒரு லெஜண்ட்-மேக்கிங்,அவர் மிக விரைவில் எங்களை விட்டு பிரிந்தது எனக்கு வேதனை அளிக்கிறது.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டு சகோதரத்துவத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.