சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க 15 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்ல இருக்கிறார். இந்த நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது. அதன்படி கோட்டையில் உள்ள கூட்டரங்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை ஆலோசனை கூட்டம் காலை 11மணி அளவில் தொடங்கி மதியம் முடிவடைந்தது
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்ற்றனர். தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், முதலமைச்சர் வெளிநாடு பயணத்திற்கான ஒப்புதலை தமிழ்நாடு அமைச்சரவை வழங்கியது.
அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு தலைமைச்செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.44,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வாகன தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி துறை மூலம் 3 முக்கிய கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நீரேற்று புனல்மின் திட்டம், தமிழ்நாடு சிறுபுனல் திட்டம், காற்றாலை திட்டத்தை புதுப்பித்தலுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
ஈரோட்டில் ரூ.1707 கோடி மதிப்பில் மில்கி மிஸ்ட் தொழிற்சாலை அமைக்கப்படும்.
கிருஷ்ணகிரியில் கிரீன் டெக் ரூ.1,779 கோடி முதலீட்டு திட்டம் உருவாக்கம்.
காஞ்சிபுரத்தில் மதர்ஸ் எலக்ட்ரானிக்ஸ் ரூ.2200 கோடி முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி உள்ளிட்ட கொள்கைகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2030-ம் ஆண்டிற்குள் பசுமை எரிசக்தி மூலம் 20,000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செம்கார்ப் நிறுவனம் புதிய ஆலையை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2030-க்குள் பசுமை எரிசக்தி மூலம் 20,000 மெகாவாட் உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
20,000 மெகாவாட் உற்பத்தி இலக்கை எட்ட 3 முறைகளில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
காற்றாலை மின்உற்பத்தி புதிய கொள்கை மூலம் 25% மின் உற்பத்தி அதிகரிக்கும்.
ஈரோட்டில் மில்கி மிஸ்ட் நிறுவனம் ரூ.1770 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் 24700 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, வாகன தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் புதுப்பிக்கதக்க எரிசக்தி, பேட்டரி தயாரிப்பு ஆகிய தொழில்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நீரேற்று புனல் மின் திட்டம், காற்றாலை மின் உற்பத்தி திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பசுமை எரிசக்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது.
வரும் 17-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம்படுகையில் ரூ.206 கோடியில் கட்டப்பட்ட தொழிலாளர்களுக்கான தங்கும் இட கட்டடம் திறக்கப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக 18,000 படுக்கை வசதியுடன் தொழிலாளர்களுக்கு தங்கும் இடம் வசதி செய்து தரப்படுகிறது.
இவ்வாறு கூறியுள்ளார்.