சென்னை,

மிழகம் முழுவதும் இன்று போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை பெரும்பாலான இடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள், ஊதிய உயர்வு, நிலுவைத்தொகையை உடனே வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் தலைநகரான சென்னையில் சுமார் 10 சதவிகித பஸ்கள் மட்டுமே தற்காலிக ஓட்டு நர்களால் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை:

கோயம்பேட்டில் இருந்து வெளியூர்கள் செல்லும் பஸ்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. உள்ளுர் பேருந்துகள் ஒருசில மட்டுமே ஓடுகின்றன.  பல இடங்களில் பஸ்களை ஓடுவதை தடுக்க கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றுள்ளது.

இதன் காரணமாக மவுண்ட்ரோடு, பீச்ரோடு, கோயம்பேடு பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40%பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

மதுரை:

மதுரையில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. 10 சதவீதத்துக்கும் குறைவான பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்

சேலம்:. சேலம் மாவட்டத்தில் 1929பேருந்துகளில் 850 அரசுப்பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கோவை: கோவையில் வேலை நிறுத்தம் காரணமாக ஊட்டி பயணிகளின் வசதிக்காக தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 90 சதவிகித அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

திருச்சி: திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 15 சதவிகித பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல், திருச்சியில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. கடலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பெரும்பாலும் பேருந்துகள் இயக்கப்பட வில்லை.

தஞ்சாவூரில் அரசு பஸ்கள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை

புதுக்கோட்டை, கடலூர்,

சிவகங்கை – காரைக்குடியில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை*

காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்டங்களில் 30 சதவீதம் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

தேனியில் 70 சதவீத பஸ்கள் இயக்கவில்லை

ராமநாதபுரம் பகுதியில் 11 பஸ்கள் மட்டுமே இயக்கபட்டு வருகின்றன.

குன்னூரில் 66 பஸ்களில் ஒரு பஸ் மட்டுமே இயக்கபடுவதாக கூறப்படுகிறது.

பெரம்பலூரில் ஒரு பஸ் கூட இயக்கப்படவில்லை

பொள்ளாச்சியில் 10 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கம்

ஈரோடு – சத்யமங்கலத்தில் 10 சதவீதம் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

பெரும்பாலான  இடங்களில் அரசு  பஸ்கள் அனைத்தும் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பஸ்களுக்கு பாதுகாப்பாக ஏராள மான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.