ரஜினி அரசியலுக்கு வருவார்: கங்கை அமரன்

Must read

ரஜினியின் இன்றைய பேச்சு, அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே எடுத்துக்காட்டுகிறது என்று பாஜகவைச் சேர்ந்த கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது:

“நல்லவர்கள் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டும் என்று ரஜினி கூறியிருக்கிறார். தான் அரசியலுக்கு வந்தால் சம்பாதிக்கும் நோக்கமுள்ளவர்களை அருகில் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்றும், அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகிவிடுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார். ஆகவே ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார்.

அதே நேரம் அவர் பாஜகவுக்கு வருவாரா என்ற கேள்வியே தேவையற்றது.

நான் எப்போதுமே ரஜினியுடன் வெளிப்படையாக பேசுவேன். இன்று இரவு அவருடன் பேசிவிட்டு மீடியாக்களிடம் பேசுகிறேன்” என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article