சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய  நிலையில்,  2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.  இந்த பட்ஜெட்   மாநிலம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

மத்திய அரசின், மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் ஒன்றிய அரசு ரூ.2150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை. மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து இதற்காக நிதியை விடுவித்துள்ளது.

இருமொழிக் கொள்கையை விட்டுத்தரமாட்டோம் என உறுதியாக உள்ள முதல்வரின் பக்கம் நின்று மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்.

‘தமிழக சட்டப்பேரவை  பட்ஜெட் அமர்வு இன்று காலை தொடங்கியது. முதல்நாள் அமர்வான இன்று வழக்கமான நடைமுறைகளுடன் அவை தொடங்கியதும்,  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 2025-26ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசி வருகிறார். திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் மற்றும் தங்கம் தென்னரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது பட்ஜெட்டாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் விவரம் வருமாறு:-

மகளிர் விடியல் பயண திட்டம் ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள் விடியல் பயணம் காரணமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 60 வரை உயர்ந்துள்ளது. மாதம் 888 ரூபாயை பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும்  என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மேலும்,10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்‘கு  ரூ.37,000 கோடி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரையில் தலா 1000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.

ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள். மாவட்டம் தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது.

நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்.

ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். இதன்மூலம்  1,308 மாணவர்கள் பயன் பெறுவர்.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு! அரசு உதவிபெறும் பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்வு

ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு

ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு

அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்

பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.

மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை.

பள்ளிக்கல்வியில் சதுரங்க ஆட்டத்தை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

நகர்ப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு

நான் முதல்வன் திட்டம் மூலம் UPSC முதல்நிலை தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு ரூ.50000 வழங்க ரூ10 கோடி நிதி

தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம்:

மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பேருந்துப் பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 40லிருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினமும், சராசரியாக 50 லட்சம் மகளிர் பேருந்துகளில் இதுவரை 642 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இத்திட்டத்தினால் பெண்கள் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் சேமிக்க முடிகிறது என மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இத்திட்டத்திற்கான மானியத் தொகை 3,600 கோடி ரூபாயை 2025-26 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கியுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்:

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே பதினைந்து லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினால் இல்லத்தரசிகளின் அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருப்பது மட்டுமன்றி அவர்கள் கணிசமாகச் சேமிக்கவும் வழிவகுக்கிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டம்:

மாணவியர் உயர்கல்வி பயில்வதை உறுதிசெய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், தற்போது நான்கு இலட்சத்து ஆறாயிரம் மாணவியர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பின் உயர்கல்வியில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை சென்ற கல்வியாண்டில் 19 சதவீதம் அதிகரித்துக் கூடுதலாக 40276 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். வரும் நிதியாண்டில் இத்திட்டத்தினைச் செயல்படுத்திட 420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழு திட்டம்:

மகளிரிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து தொழில்முனைவோர்களாக மாற்றி, சமூகத்தில் பெண்களுக்கு உரிய இடத்தினை தருகிறது. தற்போது 4.76 லட்சம் மகளிர் திட்டச் சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன.

சுயஉதவிக் குழு இயக்கத்தில் இதுவரை இணைந்திடாத மகளிர் மற்றும் விளிம்புநிலை வாழ் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு 10,000 புதிய சுயஉதவிக் குழுக்கள் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும். மேலும், வரும் நிதியாண்டில் சுயஉதவிக் குழுக்களுக்கு 37,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தோழி பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள்:

தோழி பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஏற்கெனவே தாம்பரம், திருச்சி உள்ளிட்ட 13 இடங்களில் 1,303 மகளிர் பயன்பெறும் வகையில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. எதிர்வரும் நிதியாண்டில், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் 800 பெண்கள் பயன்பெறும் வகையில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் இருக்கும் மாணவியர் பெருநகரங்களுக்கு வருகை புரியும்போது அவர்களுக்குத் தரமிக்க மற்றும் பாதுகாப்பான விடுதி வசதிகள் அமைத்திட வேண்டி கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் தலா ஆயிரம் மாணவியர் தங்கும் வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் மொத்தம் 275 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.

மூன்றாம் பாலினத்தவருக்கான திட்டம்:

மூன்றாம் பாலினத்தவரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டினையும், கண்ணியமான வாழ்வினை உறுதிசெய்யும் வகையில் மூன்றாம் பாலினத்தவரை. போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலைக்கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில், உரியப் பயிற்சிகள் வழங்கி ஊர்காவல் படையில் ஈடுபடுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, 50 மூன்றாம் பாலினத்தவர்களைக் கொண்டு சென்னை, தாம்பரம், ஆவடி மாநகரங்களில் இம்முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவரின் மதிப்பூதியம், பயிற்சி மற்றும் சீருடை போன்றவை ஊர்காவல் படையினருக்கு சமமான வகையில் வழங்கப்படும்.