சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மாநிலம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

‘தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் அமர்வு இன்று காலை தொடங்கியது. முதல்நாள் அமர்வான இன்று வழக்கமான நடைமுறைகளுடன் அவை தொடங்கியதும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 2025-26ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசி வருகிறார். திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் மற்றும் தங்கம் தென்னரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது பட்ஜெட்டாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம்!
ரூ.100 கோடியில் சென்னை அறிவியல் மையம்
ரூ .100 கோடியில் சென்னை, கோயம்புத்தூரில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்ச்சிப் படிப்புகள் மையம்!
ரூ.83 கோடியில் புதிய குழந்தை மையங்கள் அமைக்கப்படும்
கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்
1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்று நோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு.
14 வயதுடைய அனைத்து பெண்களுக்கும் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும்
திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும்
அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்
சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும் இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்