சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய  நிலையில்,  2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.  இந்த பட்ஜெட்   மாநிலம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

‘தமிழக சட்டப்பேரவை  பட்ஜெட் அமர்வு இன்று காலை தொடங்கியது. முதல்நாள் அமர்வான இன்று வழக்கமான நடைமுறைகளுடன் அவை தொடங்கியதும்,  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 2025-26ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசி வருகிறார். திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் மற்றும் தங்கம் தென்னரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது பட்ஜெட்டாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் விவரம் வருமாறு:-

இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்

ரூ.70 கோடியில் 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்கப்படும்

முதல்வர் படைப்பகம் 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும்

சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.

ரூ.11,721 கோடியில்புதிய புனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும்.  வெள்ளிமலை – 1,100 மெகாவாட் திறன்,  ஆழியாறு – 1,800 மெகாவாட் திறன் கொண்ட புனல்மின் நிலையங் கள் அமைக்கப்படும்.

4,000 மெகாவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்.

கடல்சார் வள அறக்கட்டளை – ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

6 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி.

1,125 மின் பேருந்துகள் அறிமுகம்  செய்யப்பட உள்ளது. அதன்படி, சென்னை: 950 மதுரை: 100 கோயம்புத்தூர்: 75

வங்கிக் கடன் உதவி 10 இலட்சம் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 இலட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.