சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட்டில், திருக்கோயில்திருப்பணிகளுக்கு ரூ.120 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ள நிலையில்,  சிறுபான்மை நலத்துறைக்கு ரூ.1563 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்து உள்ளது.

தமிழக சட்டப் பேரவையில்  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் தாக்கல் தொடர்பான நேரலையை பார்க்க சென்னை மாநகராட்சி பகுதிகளில் 100 இடங்களிலும், ஏனைய 24 மாநகராட்சி பகுதிகளில் 48 இடங்களிலும், 137 நகராட்சி பகுதிகளில் 274 இடங்களிலும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் 425 இடங்களிலும் என மொத்தம் 936 இடங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை மார்ச் 15-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் நிகழ்வு முடிந்ததும், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெறும். அந்த கூட்டத்தில் பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது, என்னென்ன அலுவல்களை எடுப்பது போன்றவைகள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இன்றைய பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:-

தமிழ்நாடு முழுவதும் வரும் ஆண்டில் புதிதாக 5 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்

இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதலாக 3000 வீடுகள் ரூ.206 கோடியில் கட்டித் தரப்படும்

தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளில் 57,016 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் மேலும், 40,000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

அரசு ஊழியர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1 கோடி காப்பீடு வழங்க வங்கிகள் முன் வந்துள்ளன

வங்கிக்கடன் பெற அரசு ஊழியர்களுக்கு சலுகைகள்

சைதாப்பேட்டையில் அரசு ஊழியர்களுக்கு புதிய குடியிருப்புகள்

விசைச்தறிகளை நவீனப்படுத்த ரூ.50 கோடியில் திட்டம்

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.10 கோடி

விலையில்லா இலவச வேட்டி சேலைத் திட்டத்திற்கு ரூ.673 கோடி

தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் ரூ.15 கோடியில் ஏற்படுத்தப்படும்

கைத்தறி, ஜவுளி மற்றும் கதர்துறைக்கு ரூ.1980 கோடி

பால்வளத்துறை

சேலம், ஈரோடு ஆவின் மையங்கள் மேம்படுத்தப்படும்

சுற்றுலாத்துறை

மாமல்லபுரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்காக ரூ.300 கோடியில் திட்டம்

முதற்கட்டமாக மாமல்லபுரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர், ராமேஸ்வரம் நகர வளர்ச்சி ஆணையம் அமைக்கப்படும்

நீலகிரியில் ரூ.70 கோடியில் சுற்றுலா பூங்கா அமைக்கப்படும்

இந்து சமய அறநிலையத்துறை

திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்ய ரூ.120 கோடி ஒதுக்கீடு

ரூ.125 கோடியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களுக்கு திருப்பணி

சிறுபான்மை நலத்துறைக்கு ரூ.1563 கோடி ஒதுக்கீடு

பழைமையான பள்ளிவாசல்களை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

பழைமையான தேவாலயங்களை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1434 கோடி ஒதுக்கீடு

சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள்! 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்க முடிவு

பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்க நடவடிக்கை

பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கை ரூ.10 கோடி ஒதுக்கீடு!
நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் சீரமைக்கப்படும். அதன்படி,  5,256 குடியிருப்புகள் சீரமைக்க ரூ.1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி கூடம் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்.