சென்னை: தமிழ்நாடு அரசின் 2024-2025 பட்ஜெட்டில், ஏழை மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க முதலமைச்சரின் தாயுமானவன் திட்டம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
5,000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு ரூ.500 கோடி ஒதுக்கீடு
நகர்ப்புற பசுமை திட்டம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்
ரூ.450 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவுகளும் மீன் இறங்குதளங்களும் அமைக்கப்படும்.
மதுரை மற்றும் சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும். சென்னை, கோவை, மதுரை. திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் 1000 இடங்களில் இலவச Wifi சேவை வழங்கப்படும்-தங்கம் தென்னரசு, நிதியமைச்சர்.
ரூ.50 கோடியில் புராதனக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
விவசாயிகளின் இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.500கோடி ஒதுக்கீடு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு ரூ.3,300 கோடி ஒதுக்கீடு
கிராமப்புறங்களில் 2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி ஒதுக்கீடு
5,000 நீர் நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 25,858 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.