சென்னை:  திருப்பரங்குன்றம், திருநீர்மலையில் ரோப் கார்.. 1000 ஆண்டு பழமையான கோவில் புணரமைப்புக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் அறிவித்து உள்ளார்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த 2024-25ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், மலைக்கோயில்களில் ரோப் கார் வசதி – பழமையான கோவில்கள் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, ‘தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி’ என்ற தலைப்பில், தமிழக சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1000 ஆண்டுகள் பழமையான கோயில்களின் திருப்பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்

தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு. சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.

தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு எடுத்துள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி அளிக்கிறோம்.

கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஆயிரக்கணக்கான கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பல கோவில்கள் புணரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன. மகா சிவராத்திரி விழா, நவராத்திரி கொலு கண்காட்சி போன்றவை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.