சென்னை: தமிழக சட்டமன்றத்தில், 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் தொழிற்துறைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் நாட்டிலேயே அதிக பங்களிப்பை கொண்டிருப்பதும், மாநிலத்தின் தொழிற் சூழலமைப்பின் பாலினப் பன்முகத் தன்மையும் முற்போக்கான முதலீட்டாளர்கள் பலரை தமிழகத்துக்கு ஈர்க்கின்றன.
500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் போன்ற 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழில் நிறுவனங்களக்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் ஊதிய மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
பணிபுரியும் மகளிரின் மழலைக் குழந்தைகளின் நலன் காக்க, அனைத்து சிப்காட் தொழிற்பேட்டைகளிலும் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.