சென்னை: தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.68,000 கோடியாக இருந்த நிலையில், தற்போது, வருவாய் பற்றாக்குறை ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளோம் , இது மேலும் குறைக்கப்படும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
தமிழக அரசின் 2023-24ம் நிதியாண்டுக்கான படஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய நிதியமைச்சர், தேசிய அளவோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டுகளில் மேலும் குறைக்கப்படும்.
வருவாய் பற்றாக்குறை ரூ.68,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. பல திட்டங்களை செயல்படுத்தும்போது பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வருவாய் மதிப்பில் வரு வருவாய் 5.58% குறைந்ததே வருவாய் பற்றாக்குறைக்கு காரணம் என்றும் கடந்த 2 ஆண்டுகளில் அரசு எடுத்த முயற்சி காரணமாக ஜிடிபியில் 6.9% வரி வருவாய் உயர்ந்துள்ளன எனவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டின் நிதிபட்ஜெட்டின் போது (2022-23)ல் தமிழ்நாடு அரசின் தமிழ்நாட்டின் வரவு ரூ.2.37லட்சம் கோடியாக உள்ளது என்றும், 2022-23 பட்ஜெட் மதிப்பீடுகள் அடிப்படையில் தமிழ்நாட்டின் கடன் ரூ.3.33 லட்சம் கோடியாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டதுடன், 2022-23 பட்ஜெட் மதிப்பீடுகள் அடிப்படையில் தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ.90,114 கோடியாக உள்ளது என்று வறப்பட்டது. அதன்படி, 2022-23 பட்ஜெட் மதிப்பீடுகள் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு ரூ.24.84 லட்சம் கோடியாக இருந்தது.
இந்த நிலையில், தற்போது வருவாய் பற்றாக்குறை ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளோம் என நிதியமைச்சர் பிடிஆர் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.