சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட் உரையை தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டில், பெட்ரோல், டீசலை நியாயமான விலையில் வழங்குவது மத்திய அரசின் கடமை என்று கூறினார்.

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல்பட்ஜெட் இன்று தாக்கலாகி வருகிறது.  கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.  அவர் கூறியதாவது,

6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது நடப்பு நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும் என்றார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

” 2014ஆம் ஆண்டில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி ரூ. 10.35 ஆக இருந்தது. ஆனால், தற்போது பெட்ரோல் மீதான வரி ரூ. 32.9ஆகவும் டீசல் மீதான வரி ரூ. 3.57ல் இருந்து ரூ. 31.8ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலை நியாயமான விலையில்  பயனாளர்களுக்கு வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றார்.

பெட்ரோல், டீசல் வரி உயர்வால் மத்திய அரசுக்கு 69% வருவாய் அதிகரித்துள்ளது; மாநிலங்களுக்கு குறைந்த அளவே வரி வருவாய் பிரித்து அளிக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி ரூ. 10.35ஆக இருந்தது தற்போது ரூ. 32.9ஆகவும் டீசல் மீதான வரி ரூ. 3.57ல் இருந்து ரூ. 31.8ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம், ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியின்படி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தரவுகளை திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும். அனைத்து துறைகளின் நடைமுறைகளும் முழுமையாக கணினிமயமாக்கப்படும் அனைத்து அரசு நிதியும் கருவூலத்தில் வைக்கப்படும்

வரிமுறையை சீர்செய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்படும்

தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ. 5கோடி ஒதுக்கீடு கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்

தேசிய கடற்சார் நிறுவனம் உதவியுடன், சங்க கால துறைமுகங்கள் அமைந்திருக்கும் இடங்களில் கடல் ஆய்வுகள் நடத்தப்படும்.

மாநில அரசின் நிதியை திசை திருப்பும் வகையில் ஒன்றிய அரசு வழிமுறை இருக்கிறது.

நான்கு முக்கிய கூறுகளுடன் தமிழக அரசு செயல்படும். வெளிப்படைத்தன்மை, சமூக ஈடுபாடு, வல்லுநர்கள் கருத்து, உறுதியான நடவடிக்கை அடிப்படையில் அரசு செயல்படும்.