சென்னை: பட்ஜெட்டில் தொல்லியல் ஆய்வுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், தீயணைப்புதுறை, நீதித்துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக உறுப்பினர்களின் அமளிக்கிடையே தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதையடுத்து அதிமுகவினர் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக காகிதமில்லா முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி கலைவாணர் அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜைகளில் கணினி பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மேஜையிலும் கணினி பொருத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் வாசிக்கும் பட்ஜெட் உரை, கணினி திரையில் ஒளிரும். இது தவிர அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், கையடக்க தொடுதிரை கணினி வழங்கப்பட உள்ளது.  பட்ஜெட் உரை இடம் பெற்றிருக்கும். புத்தகத்தை புரட்டுவது போல, பக்கங்களை முன்னும் பின்னும், மேலும் கீழும் எம்.எல்.ஏ.,க்கள் நகர்த்தி உரையை பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் நிதிநிலை சிக்கலை சரிசெய்ய மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும் ஒரே ஆண்டில் செய்து முடிக்க முடியாத அளவுக்கு பணி மிகக் கடுமையாக உள்ளதாக நிதியமைச்சர் கூறினார். தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.

தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொற்கை, அழகன்குளம் பகுதியில் ஆழ்கடல் அகழ்வு பணி மேற்கொள்ளப்படும்.

பட்ஜெட்டில் நீதித்துறைக்கு ரூ.1,713.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதிய கட்டடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையில் பணிபுரிவோருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள 1985ஆம் ஆண்டு தீயணைப்புச் சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்

தமிழக காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக காவல்துறையில் 1,33,198 பணியிடங்களில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துகளை தடுக்க, ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம் மாற்றியமைக்கப்படும்

சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500கோடி நிதி ஒதுக்கீடு