சென்னை:  திமுக ஆட்சி அமைந்த பிறகு முதன் முறையாக தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

பட்ஜெட்டில் தமிழக பட்ஜெட்2020-21: ரூ.10லட்சம் பரிசுடன் செம்மொழி கலைஞர் சிறப்பு விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்பது உள்பட ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய தகவல்கள்

  • செம்மொழி கலைஞர் சிறப்பு விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.
  • ஆண்டு தோறும் ஜூன் 3ம் தேதி கலைஞர் செம்மொழி தமிழ் விருது உடன் ரூ. 10 லட்சம் பரிசும் வழங்கப்படும்
  • தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80.26 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 1921ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேரவை நிகழ்வுகள் குறித்த அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்படும்.
  • தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்.
    உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். தொழில்நுட்ப புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படும்.
  • கீழடி, சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இந்த பணிகளுக்கு ₹5 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4807 கோடி ஒதுக்கீடு.
  • உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
  • தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி வேளாண்மைக்கான தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும்.
  • தலைநிமிரும் தொலைநோக்கு திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
  • அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறை கொண்டு வரப்படும் –
  • நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கு மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். இதை கண்காணிக்க ஒய்வு பெற்ற நீதிபதி மற்றும் சட்ட வல்லுனர்கள் குழு அமைக்கப்படும்.
  • 2.05 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான தமிழ்நாடு அரசின் நிலங்கள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளன.