சென்னை:  பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், மேலும் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த நிலையில், முதல் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக காகிதமில்லாத வகையில் இ-பட்ஜெட்டாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் துறை ரீதியிலான ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி,

பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ரூ.32,599.54 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் தமிழகத்தில் புதிதாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் விடுதிகளை மேம்படுத்த ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வசதி இல்லாத சட்டமன்றங்களில் சிறு விளையாட்டு அரங்கம் ஏற்படுத்த ரூ. 3 கோடி ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் வழங்கப்படும். விளையாட்டு துறைக்கு ரூ. 225.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.