சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் , ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி படத்துடன் டிவிட் பதிவிட்டிருந்தது.  தற்போது, இந்த பதிவு பொய் என நிரூபிக்கப்பட்டதால், உடனடியாக அந்த டிவிட்டை நீக்கியுள்ளது.
சாவு நிகழ்விலும், ஆதாயம் தேடும் தமிழ்நாடு பாரதியஜனதா கட்சியின் நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த பொழப்பு தேவையா, இதற்கு பதில்…… ? என சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா கட்சியை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
இவர் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து, அவரது வீட்டுக்கு எடுத்துவதற்கு முன்னதாகவே, அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தியதாக,  தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி டிவிட்டர் பக்கத்தில் படத்துடன் தகவல் பகிரப்பட்டிருந்தது.
பாஜகவின் டிவிட்டை பார்த்த பலர், கேவி.ஆனந்த்வீட்டிற்கு சென்று,  அவரது உடலுக்கு  அஞ்சலி செலுத்தலாம் என சென்றபோது, அவரது உடலே மருத்துவமனை யில் இருந்து வராதது தெரிய வந்தது. இதன்மூலம் தமிழக பாஜகவின் தில்லாலங்கடி வேலை வெளிச்சத்துக்கு வந்தது.
இதுதொடர்பாக, பலர் பாஜகவின் டிவிட் குறித்து கடுமையாகவும், மிகவும் கேவலமாகவும்  விமர்சித்து வந்தனர்.  அதையடுத்து, தனது படத்துடனான பழைய டிவிட்டை நீக்கிவிட்டு, கேவி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கதாக புதிய டிவிட் பதிவிடப்பட்டுள்ளது.
சாவிலும் ஆதாயம் தேடிய பாரதியஜனதா கட்சியின் மானங்கெட்ட பொழப்பு சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.