சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.
தமிழக சட்டசபையில், கடந்த மார்ச் மாதம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடந்தது. இந்த நிகழ்வுகள் முடிந்ததும், மே மாதம் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 10:00 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது.
மறைந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்த பின், முதல் நாள் சபை நிகழ்வுகள் நிறைவு பெறும்.
பின், சபாநாயகர் அப்பாவு தலைமையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது.
அதில், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் இதர கட்சிகளின் சட்டசபை தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.