மிழக சட்டசபைக்கு மொத்தம் 235 உறுப்பினர்கள் உண்டு. இவர்களில் 234 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவர், அரசால் நியமிக்கப்படுவார். (ஆங்கிலே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.)

இங்கு ஆட்சியில் மெஜாரிட்டையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. அதாவது  234 எம்.எல்.ஏக்களில் பாதி.

ஆனால் இன்று தமிழக சட்டமன்றத்தில் நடக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் 116 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் போதும்.

காரணம், மரணமடைந்துவிட்டதால் ஜெயலலிதாவின் இடம் காலியாக இருக்கிறது. உடல் நலம் இல்லாததால், தி.மு.க. தலைவரும் திருவாரூர் மாவட்ட எம்.எல்.ஏவுமான கருணாநிதி இன்று சபைக்கு வரமாட்டார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகர் (தனபால்) வாக்களிக்க முடியாது. ( இரு தரப்புக்கும் ஒரே அளவிலான வாக்குகள் கிடைத்தால் அந்த நேரத்தில்தான் சபாநாயகர் தனது வாக்கை அளிக்க முடியும்.)

ஆகவே இன்றைய வாக்கெடுப்பில் 231 எம்.எல்.ஏக்கள்தான் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ஆகவே வழக்கமாக வெற்றி பெறத் தேவையான117 எம்.எல்.ஏக்களுக்கு பதிலாக 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தாலே எடப்பாடி பழனிச்சாமி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிடுவார்.

ஆக மந்திர எண்.. 116!