சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில்,  காலை 9 மணி வரை 13.80% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் பொதுமக்கள் விறுவிறுவென வாக்குகளை செலுத்தி வருகின்றனர். துணைமுதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின், கமல்ஹாசன் உள்பட அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களது வாக்குகளை காலையிலேயே செலுத்தி உள்ளனர்.

காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 20.23 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லையில் 9.98 சதவீத வாக்குகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார். சென்னையில் 10.58 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

Related Tags :