சென்னை:
மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது.
தமிழக சட்டசபை நிதிநிலை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் பொது நிதிநிலையும் அதற்கு மறுநாள் வேளாண் நிதிநிலையும் தாக்கல் செய்யப்பட்டது. 16-ந்தேதி முதல் நிதிநிலை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி கடந்த 4 நாட்களாக விவாதம் நடைபெற்று வந்தது.
பொது நிதிநிலை, வேளாண் நிதிநிலை பற்றி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்கு நாளை முதல் முதல் மீண்டும் கூடும் சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் செப்டம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாளை நடக்கும் கூட்டத்தில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செப்டம்பர் 21-ந்தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.