சென்னை,

மிழகம், புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி (10ம் வகுப்பு) தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஆயத்தமாக இருக்கிறார்கள்.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் பிளஸ்-2 தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு நாளை தொட்ங்குகிறது.

இந்த தேர்வு நாளை (8ந்தேதி) தொடங்கி 30ந்தேதி முடிவடைகிறது.

ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12 ஆயிரத்து 187 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத இருக்கிறார்கள்.

தேர்வுக்காக  மாநிலம் முழுவதும் 371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கூடங்களில் காப்பியடித்தல் உள்ளிட்ட செயல்களை கண்காணிக்கும் வகையில் ஆசிரியர்கள் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படைகளின் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன

தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருப்பதாக கல்வி தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.