கோவை:
இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புபோல வேளாண் படிப்புக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே வேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும், வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று மாலை 3 மணி முதல், மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கி உள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 17ஆம் தேதி கடைசி நாள். அதையடுத்து, ஜூன் 22ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்கட்ட இணையவழி கலந்தாய்வு ஜூலை 9ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதள லிங்கை கிளிக் செய்யவும்
https://tnauonline.in/