சென்னை: தொழில்துறையில் தமிழகம் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது என சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகத் தமிழ் முதலீட்டாளர்களையும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களையும் இணைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள Global Tamil Angels (http://tamilangels.fund) இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த  நிகழ்வில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ய அமெரிக்க வாழ் தமிழக முதலீட்டாளர்கள் வரும் டிசம்பர் 2023-க்குள் அமெரிக்க தமிழ் நிதியம் (ATF) ரூ. 16.50 கோடி முதலீடுகளை வழங்குவதற்கான விருப்ப கடிதத்தினை  அமைச்சர் தாமோ அன்பரசனிடம்  அளித்தனர்.

நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின்,  தொழில் துறையில் 13 வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. தொழில் தொடங்க உகந்த இடமாக தமிழகம் தற்போது உருவாகியுள்ளது. என குறிப்பிட்டார்.

மேலும், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடுகள் வந்துள்ளன. கடந்த 2021ஐ ஒப்பிடுகையில் இது 70 விழுக்காடு அதிகம். டெல்லி , மும்பை, பெங்களூரு போன்ற தொழில்வளம் மிக்க நகரங்களில் கூட இந்த முதலீட்டாளர்கள் எண்ணிக்கை மந்தமாக தான் இருந்தது. ஆனால் தமிழகத்தில் முதலீட்டாளர்கள் அதிகம் வந்துள்ளனர்.

தமிழகத்தில் அனைத்துவிதமான தொழில்களும் வளர வேண்டும். அனைத்து மாவட்டங்களும் பயன்பெற வேண்டும் என்பதை மனதில் வைத்தே தமிழக அரசு செயல்படுகிறது. பட்டியலின புத்தொழில் முதலீட்டாளர்களுக்காக 30 கோடி நிதி உருவாக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்கள் தீர்வு தரும் வகையில் 1000 கோடி ரூபாய் பசுமை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என தமிழக அரசின் பல்வறு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

[youtube-feed feed=1]