டெல்லி: உலகளவில் தமிழ் மொழி படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தமிழ் மொழி குறித்து சிலாகித்துள்ளார்.

பிரதமர் மோடி, மாதந்தோறும் வானொலி மூலம் மான்கிபாத் என்ற பெயரில், இந்திய நிகழ்வுகள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்து மக்களிடையே  உரையாற்றி வருகிறார்.  இதற்கு பெரும் வரவேற்பு உள்ளது.  இந்த நிகழ்ச்சியின்போது, பட்டி தொட்டிகளில் உள்ள சிறு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களையும் கண்டறிந்து, அவர்களை பாராட்டி வருகிறது.   அத்துடன் அவ்வப்போது தமிழ்மொழி குறித்து  சிலாகித்து வருகிறார்.  ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்று பேசிய  மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் பிரதமர் உரையாற்றும்போது,  மறைந்த தமிழ்நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி,   சர் சி.வி.ராமன் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்ட  தேசிய அறிவியல் தினம் குறித்து  பேசியதுடன்,   நமது விஞ்ஞானிகள் குறித்து இளைஞர்கள் நிறைய படிக்க வேண்டும். இளைஞர்களின் மத்தியில் புதுமையின் உணர்ச்சியை காண முடிகிறது.  தற்சார்பு பொருளாதார இலக்குக்கு அறிவியல் மிகப் பெரிய பங்களிப்பு செய்கிறது. அறிவியல் என்பது எல்லை இல்லாதது என்று கூறியதுடன், என் குறைபாடுகளில் ஒன்று, என்னால் தமிழ் கற்றுக்கொள்ள அதிக முயற்சி எடுக்க முடியவில்லையே என்பதுதான். இதை நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

உலகின் மிகப் பழமையான மொழியான தமிழைக் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. உலகம் முழுவதும் தமிழ்மொழி பிரபலமாக இருக்கிறது.  உலகின் தொன்மையான மொழி  அழகான மொழியான தமிழின் இலக்கியத்தரம், தமிழ் கவிதைகளின் ஆழம் பற்றியும் ஏராளமானோர் என்னிடம் புகழ்ந்து கூறியுள்ளனர். இந்தியா பல மொழிகளின் பூமி. இது நமது கலாசாரத்தையும், பெருமையையும் குறிக்கிறது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், 2024ம் ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியானது டிசம்பர் 29ந்தேதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.  இது  பிரதமர் நரேந்திர மோடியின் 117வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும். இதில்  உரையாற்றிய பிரதமர், நாட்டின் அரசியலமைப்பு குறித்து பேசும்போது,  அரசியலமைப்பே நமக்கு வழிகாட்டும் வெளிச்சம் என தெரிவித்ததுடன்,  அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்தியாவின் மைல்கல்லை கொண்டாடும் வகையில், நாடு தழுவிய பிரச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

தொடர்ந்து பேசியவர்,  உலகிலேயே தொன்மையான மொழி தமிழ் என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்ததுடன்,   உலகெங்கிலும் உள்ள நாடுகளில் தமிழை படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என கூறியதுடன், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், உலகின் மிகப் பழமையான மொழியான தமிழ், பிஜியில் எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பது குறித்து பிரதமர் விவரித்தார். ஃபிஜி மக்கள் எவ்வாறு தமிழ் மொழியைக் கற்கிறார்கள் என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில், தமிழை புகழ்ந்து பேசியது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழை கற்காதது வருத்தம்… மான் கி பாத்தில் மோடி நெகிழ்ச்சி…