சென்னை:  அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர்கல்வித்தறை அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு தமிழக்ததில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது நான் முதல்வன் திட்டம்,  பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக மாநில அரசே நியமனம் செய்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்த நிலையில்,  அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

 இது குறித்து உயர்கல்வித்துறை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்ட்டரில் தமிழ் பாடம் கட்டாயம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்திலும் தமிழ் பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும். சில கல்லூரிகள், பல்கலைகழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று தகவல் வெளியானது. இதனை அடுத்து அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.