நாகர்கோவில்: தமிழ் மொழி அழகான மொழி,   நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.! ஆனால் அது கடினம். என ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி தனது ஆசையை தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி  குமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத ஒற்றுமை யாத்திரையை 7ந்தேதி தொடங்கினார்.  இன்று 3ஆம் நாளாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன், ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், கூட்டணி கட்சி களின் தொடர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இன்றைய யாத்திரையின்போது, அவருடன், விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், கிராமத்து சமையல் யுடியூபர்கள் கலந்துகொண்டு நடைபயணம் மேற்கொண்டதுடன், ராகுலுடன் கலந்துரையாடினார்.

இடையிடையே செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்துக்கொண்டே நடைபயணம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை ஒருவர் தமிழ் கற்றுக்கொள்வீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ராகுல்,

‘தமிழ் மொழியை நிச்சயம் நான் விரைவாக கற்று கொள்ள வேண்டும் என்றவர், தமிழ் மொழி அழகான மொழி. ஆனால், அதனை கற்று கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன் ‘ என தனது ஆசையை தெரிவித்தார். மேலும், மோடி அரசு,  ‘ வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு செயல்படுகிறது என்றும் விமர்சனம் செய்தார். 

தொடர்ந்து பேசியவர், நான் காங்கிரஸ் தலைவராக வரலாமா வேண்டாமா என்பது தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும்போது தெளிவாகத் தெரியும். நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக முடிவு செய்துவிட்டேன். என் மனதில் எந்த குழப்பமும் இல்லை என்றவர்,  “காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் நாட்டின் ஒற்றுமைக்காக இந்த நடை பயணத்தில் பங்கேற்பது எனது கடமை. நடைப்பயணத்தில் நான் பங்கேற்பதில் முரண்பாடு எதுவும் இல்லை”  என்றார்.