சென்னை:

ளுநர் பன்வாரிலாலுடன் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சந்தித்து பேசினர். அப்போது  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், ஆர் கே செல்வமணி, ராம், கவுதமன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசினர்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து மனு கொடுத்தனர்.

இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், ஆர் கே செல்வமணி, ராம், கவுதமன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசினர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம்  கோரிக்கை விடுத்ததாகவும்,  கர்நாடகாவை சேர்ந்தவரை அண்ணா பல்கலை., துணைவேந்த ராக நியமித்தது ஏன் என்று பாரதிராஜா கேள்வி எழுப்பியதாகவும் கூறினார்.

கல்வி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் எந்த அரசியலும் இல்லை என்று ஆளுநர் கூறினார் என்று கூறிய பாரதிய ராஜா,  இசைக் கல்லூரிக்கு கேரளத்தை சேர்ந்தவரை முதல்வராக நியமித்தது யார் என்று தெரியவில்லை என்று ஆளுநர் கூறியதாகவும்  அவர் தெரிவித்தார்.