இயக்குனரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் காலமானார், அவருக்கு வயது 69.

கல்லீரல் பிரச்னை காரணமாக கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோபாலா 1982ம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
Patrikai.com official YouTube Channel