தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவி பெங்களூரில் இன்று காலமானார்.
87 வயதான சரோஜாதேவி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் வயது முதிர்வு காரணமாக இன்று காலை பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
1957ம் ஆண்டு தங்கமலை ரகசியம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான சரோஜாதேவி தொடர்ந்து நாடோடி மன்னன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் எம்.ஜி.ஆர். உடன் நடித்து தமிழ்த்திரையுலகில் நீங்காத இடம்பிடித்தார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel