கடந்த சில ஆண்டுகளாகவே சில சுயநலத் தலைவர்கள், தமிழகத்தின் அரசியலில் ஒரு உறுதியான தலைமை ஏற்பட்டு விடக் கூடாது என்று செயல்பட்டு வருகிறார்கள்!
அப்படி ஒரு ஆட்சி அமைந்து விடக் கூடாது என்று கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அவர்கள் முயற்சி செய்தனர்!
ஆனால், தமிழக மக்களோ, ஸ்டாலின் தலைமையிலான அணிக்குப் பேராதரவு அளித்து வெற்றி பெறச் செய்தார்கள்!
அன்று முதல், ‘ தமிழ்த் தேசியம்’ என்ற அந்த ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு… நாகரீகமின்
றிப் பேசுவது… மிகவும் அராஜகமாகப் பேசுவது என்று தரை லோக்கலுக்கு இறங்கியிருக்கிறார்கள்!
ஆனால்… கடந்த பத்து ஆண்டுக்கால ஊழல் மிகுந்த ஆட்சியால் மிகவும் பின்னணியில் இருந்த தமிழகம், தற்போதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது!
ஆனால், புதிதாக, ‘ தமிழர் நாள் ‘ பற்றிய விவகாரத்தைப் பெரிதாக்கி , இந்தப் போலித் ‘ தமிழ்த் தேசியர்கள்’உரத்த குரலில் முழங்கி வருகிறார்கள்…!
இச்சூழலில், மேற்படி அருவருத்து ஒதுக்கத் தக்க இந்தக் ‘ கூலித் தலைவர்களை’த் தமிழக மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!!
— ஓவியர் இரா. பாரி.