சென்னை: தாம்பரம் புளுஸ்டோன் வைர நகைக்கடை கொள்ளை நடைபெற்ற விவகாரத்தில், சிலமணி நேரத்தில் வடமாநில கொள்ளையனை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தது.
தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் புளுஸ்டோன் எனும் பிரபல நகைக்கடையில் மர்ம நபர்கள் இன்று அதிகாலை பல கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இநத் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக்கொண்டு விசாரணை நடத்தினர். உடனே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் காவல்துறை உஷார் படுத்தப்பட்டது.
இந்த நிலையில், கொள்ளை நடந்த சில மணி நேரத்தில் கொள்ளையளை சுற்றி வளைத்த போலீஸ்; கொள்ளையடிக்கப்பட்ட தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்ததன் இந்த கொள்ளை சம்பவத்தின் தலைவனையும் அதிரடியாக கைது செய்தனர்.
கொள்ளையன் பதுங்கி இருந்த வீட்டின் மாடியில் நகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் யார் யார் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் என்பதும் தெரிய வந்துள்ளதுடன், அவன், அதே பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கைது செய்த கொள்ளையனை சேலையூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.