தமிழ், தெலுங்கு, இந்தி எனத் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.
இந்த நேரத்தில் அவருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என்றும், அதனைத் தொடர்ந்து அவர் திரையுலகில் கவனம் செலுத்தமாட்டார் எனவும் வதந்திகள் பரவியது .
இந்தச் செய்திக்கு தமன்னா மறுப்பு தெரிவித்துள்ளார்.”தேவையற்ற வதந்திகளைக் கிளப்பிவருகிறார்கள். திட்டமிட்டே பரப்பி வருகிறார்கள். திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்திலேயே நானில்லை. எனது திருமணம் பற்றி வரும் செய்தி வெறும் வதந்தியே” என்று தெரிவித்துள்ளார் தமன்னா.