தமிழில் தமன்னாவின் மார்க்கெட் சுமாராக இருந்த போதிலும் தெலுங்கில் பிசியாகவே இருக்கிறார்.

அனில் ரவிபுடி என்ற இயக்குநர் டைரக்டு செய்து கடந்த ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான f2 (fun and frustration) சக்கைபோடு போட்டது.

வெங்கடேஷ், வருண் தேஜ் ஆகியோர் கதாநாயகன்களாக நடித்த இந்த படத்தில் தமன்னாவும், மெஹ்ரீனும் நாயகியராக நடித்திருந்தனர்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த உருவாக்கப்பட்ட இந்த படத்தின் இரண்டாம் பாகம் F3 என்ற பெயரில் தயாராகிறது. அதே நடிகர்.நடிகைகளை வைத்து அனில் ரவிபுடி இந்த படத்தையும் டைரக்டு செய்கிறார்.

ஐதராபாத்தில் இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. வருண் தேஜ் – தமன்னா பங்கேற்றனர், பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ‘கிளாப்’ அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

முதல் பாகத்தை தயாரித்த தில்ராஜ், இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார்.

– பா. பாரதி

[youtube-feed feed=1]