இஸ்லாமாபாத்
பெனாசிர் புட்டோவை தங்கள் அமைப்பினர் கொன்றதாக பாகிஸ்தான் தலிபான் ஒரு புத்தகத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த பெனாசிர் புட்டோ ஒரு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துக் கொண்டார். அப்போது தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். அதற்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பை பலரும் குற்றம் சாட்டினர். ஆனால் அதை அந்த அமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை.
தற்போது பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கத் தலைவர் அபு மன்சூர் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார் அந்த புத்தகத்தில் பெனாசிர் புட்டோவை தலிபான் தீவிர வாத இயக்கம் கொன்றதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் தலிபான்களின் தற்கொலைப் படையை சேர்ந்த பிலால் மற்றும் இக்ரா முல்லா ஆகியோர் இந்த தாக்குதலை நடத்தியதாக அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு தேர்தலில் வெறி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் பெனாசிர் புட்டோ முஜாகிதீன்களுக்கு, எதிராக நடவடிக்கை எடுக்க திட்டம் இட்டிருந்தார். அத்துடன் அமெரிக்காவுடன் இணைந்து தீவிர வாதக் குழுக்கள் அனைத்தையும் தடை செய்ய திட்டம் இட்டிருந்தார். அவருடைய கொலைக்கு இதுவே காரணம் என அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.