ஜாகர்தா

ந்தோனேசியா தலைநகரில் பங்குச்சந்தை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்

இந்தோனேசியவின் தலைநகரான ஜாகர்த்தாவில் அந்நாட்டின் தேசிய பங்குச்சந்தை இயங்கி வருகிறது.    நேற்று காலையில் பணி நேரத்தில் கட்டிடத்தின் 2 ஆவது மாடி திடீரென இடிந்து விழுந்தது.   இதில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் இடிபாடுகளில் சிக்கினர்.    இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு உண்டாகியது.

பங்குச் சந்தை உடனடியாக மூடப்பட்டு தீயணைப்புத் துறையினர் வந்து மீட்புப்பணியில்  ஈடுபட்டனர்.   அப்போது சுமார் 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   கட்டிடம் இடிந்ததற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.