கோரக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் கையகப்படுத்த வேண்டும் என்று கோரக்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ போர்க்கொடி தூக்கி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில், 2 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான சீரம் மருந்து நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்துள்ளது. ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பூசி தயாரித்து வருகிறது. அதுபோல, ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியது.

இந்த கோவிஷீல்டு  தடுப்பூசியை ஆரம்பக்கட்டத்தில் ஒரு டோஸ் 200 ரூபாய் மத்திய அரசுக்கு வழங்கப்படுவதாக சீரம் நிறுவனம் அறிவித்து வழங்கி வருகிறது .ஒரு கோடி தடுப்பூசி மருந்துகளை முதற்கட்டமாக கொள்முதல் செய்ய சீரம் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதைத்தொடர்ந்து, ஜனவரி  16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது தொற்று பரவல் தீவிரமாக உள்ளதால், 18வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் திடீரென பல மடங்கு அதிகப்படுத்தி உள்ளது. இது சர்ச்சையை  ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  கோரக்பூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ, டாக்டர் ராதாமோகன்தாஸ் அகர்வால் (Dr. Radha Mohan Das Agarwal) சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லாவை கடுமையாகவும், மிகவும் கேவலமாக  விமர்சித்ததுடன்,  சீரம் மருந்து தயாரிக்கும்  தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் நிறுவனத்தை ‘கையகப்பபடுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

பாஜக எம்எல்ஏ, சீரம் நிறுவனத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]