டெல்லி: நாட்டுக்கு தேவை தவறான கொண்டாட்டங்கள் மற்றும் வெற்று உரைகள் அல்ல,  தீர்வைக் கொடுங்கள் என  ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ள நிலையில், தடுப்பூசி, தடுப்பு மருந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசியின் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தியும் கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், மோடி அரசு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி காட்டமாக டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன், சோகமான செய்தி தொடர்ந்து வருகிறது.

இந்தியாவில் நெருக்கடி என்பது கொரோனா மட்டுமல்ல, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளும் ஆகும்.

தவறான கொண்டாட்டங்கள் மற்றும் வெற்று உரைகள் அல்ல, நாட்டுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கள்! என கூறியுள்ளார்.

இந்தியாவில் ஏற்பட்ட நெருக்கடி என்பது கொரோனாவால் மட்டுமல்ல, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளினாலும் ஏற்படுகிறது. எங்களுக்கு தவறான கொண்டாட்டங்கள் மற்றும் வெற்று உரைகள் வேண்டாம், நாட்டுக்கு ஒரு தீர்வு கொடுங்கள் “என்று அவர் இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார்.