சென்னை: அதிகாரியை ஜாதிய ரீதியிலாக அவமதித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுங்கள் என மாவட்ட ஆட்சியர், காவல் கணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அவரை சந்திக்கச் சென்ற, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரான பட்டியலினத்தைச் சேர்ந்த ராஜேந்திரனை சாதி ரிதியிலாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிகாரியை பார்த்து, இந்த பிளாக்ல, ….. பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் உன்னை வைத்துள்ளேன். அல்லது, உன்னை உடனே டிரான்ஸ்பர் செய்து இந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்துக்கு மாற்றிவிடுவேன் என்று ஒருமையில் பேசியதாக பாதிக்கப்பட்ட அதிகாரி புகார் கூறியிருந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆகியோரைச் சந்தித்து அவர் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையைனது. இதையடுத்து, அமைச்சயை பதவியை விட்டு நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், முதல்வர் ஸ்டாலின்,அவரது அமைச்சர் பதவியை மட்டுமே மாற்றினார்.
இதற்கிடையில், பட்டியலின பிடிஓவை அவமதித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பறையர் பேரவையின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி, சாதி பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரை பரிசீலித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், அமைச்சர் ராஜகண்ணப்பன்மீது நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.