Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

செப்டம்பர் 21-ம் தேதி முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது தாஜ்மகால்! மத்திய அரசு

Sep 8, 2020

சென்னை: செப்டம்பர் 21-ம்  தேதி  ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் பார்வையாளர்களுக்காக திறந்து விடப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் போக்கு வரத்து, சுற்றுலாத்தலங்கள், பொழுதுபோக்கு பகுதிகள், கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டது.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. இதுவரை 5 கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி செப்டம்பர் 1ந்தேதி முதல் 90 சதவிகிதம் அளவிலான தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, பொதுப்போக்குவரத்து, சுற்றுலாத்தலம் உள்பட பலவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  அதன்படி, மூடப்பட்ட தாஜ்மகால், 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கும் தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

வரும் செப்டம்ர் 21-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவை திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.

தாஜ்மகால் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் மட்டுமே தரப்படும்,  தினமும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Post navigation

எழுத்தறிவில் கேரளா முதலிடம்..
‘பப்ஜி’க்கு இறுதி ஊர்வலம்! இளைஞர்கள் நடத்திய அதகளம்…

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer