
டாக்கா: விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி தடுமாறிய நிலையில், அந்த அணியின் பின்கள வீரர்கள் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.
7வது மற்றும் 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹாசன் இருவரும் அரைசதம் அடித்துள்ளனர். இவர்களைப் பிரிக்க முடியாமல் விண்டீஸ் அணி திணறி வருகிறது.
மொத்தம் 121 பந்துகளை சந்தித்துள்ள லிட்டன் தாஸ் 64 ரன்களையும், 118 பந்துகளை சந்தித்துள்ள மெஹிதி 51 ரன்களையும் எடுத்துள்ளனர். இதனால், சரிவிலிருந்து மீண்டு வருகிறது வங்கதேச அணி.
தற்போது, 6 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை எடுத்துள்ள வங்கதேச அணி, விண்டீஸ் அணியைவிட 141 ரன்கள் பின்தங்கியுள்ளது.
[youtube-feed feed=1]