சென்னை: அறுவடைத்திருநாள் மற்றும் உழவர் திருநாளான பொங்கல் திருநாள் தை 1ந்தேதி  கொண்டாடப்படும் நிலையில், நாளை பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை ஜோதிடர்கள் தெரிவித்து உள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே நாளை தை மாதம் பிறப்பதை முன்னிட்டு, அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படு கிறது. பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு மட்டுமின்றி,  தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் என உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்த பொங்கல் பண்டிகையை தை முதல் நாளில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் பயிர் செய்த பயிர்களை அறுவடை செய்து, அந்த புதிய நெற்கதிர்கள் மூலம் பெறப்பட்ட அரிசியை தமிழர் திருநாளான தை முதல் நாளில் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய கடவுளுக்கு படைத்தது தமிழ் மக்கள் வழிபடுவார்கள்.  அன்றைய தினமே பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி தை முதல் நாள் (ஜனவரி 15ந்தேதி) சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  பொங்கல் பொங்கி சூரியனுக்கு படையலிட்டு கொண்டாடப்படுகிறது. தை2ம் நாளாள், உழவுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, புதிய கயிறு மற்றும் மணிகள் போன்றவற்றை மாடுகளுக்கு அணிவித்து , அதற்காக பொங்கல் வைத்து மாடுகளுக்கு ஊட்டி மகிச்சியுடன்  மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படகிறது.

இந்த ஆண்டு (2023)  ஜனவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பொங்கல் பண்டிகை வருகிறது, பொதுவாக கிராமப்புறங்களில் சூரிய உதயத்தின்போது பொங்கலிட்டு, அந்த புதுநெல்லி அரிசி பொங்கலை சூரியனைக்கு படைப்பது வழக்கம். ஆனால்,  நகர்ப்புற மக்களிடையே இதனால் பொங்கல் எப்போது பொங்க வேண்டும் என  எதிர்பார்ப்பு உண்டு. அவர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையிலேயே, பொங்கல் வைக்க உகந்த நேரம் குறித்து ஜோதிடர்கள் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாளைய தினம் பொங்கல் வைக்க உகந்த நேரம்  காலை 07.30 மணி முதல் 08.30 வரை,

காலையில் வைக்க முடியாதவர்கள், மாலை 03.30 முதல் 04.30 வரையிலானநேரத்தில் வைக்கலாம். 

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை பொழுதில் ராகுகாலம், எமகண்டம் போன்றவை இல்லாததால் முற்பகலில் வைப்பதே சிறந்தது.

கெளரி நல்ல நேரம் – காலை 10.30 முதல் 11.30 வரை உள்ளதால், 10.30 மணிக்கு முன்னாள் வைப்பது நல்லது.

மதியம்   பகல் 12 முதல் 01.30 வரை எமகண்டம்  உள்ளது. அதையடுத்து,  மாலை 04.30 முதல் 6 வரை ராகுகாலம் உள்ளது. அதனால், காலையில் பொங்கலிட முடியாதவர்கள்,  பிற்பகல் ராகுகாலம் தொடங்குவதற்கு முன்பு பொங்கலிடலாம்.

நாளை மறுதினம்  மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 06.30 முதல் 07.30 வரை, மாலை 04.30 முதல் 05.30 வரை ஆகும்.