டி20 உலக கோப்பை: நியூசிலாந்தை 5விக்கெட் வித்தியாத்தில் வீழ்த்தி 2வது வெற்றியை பெற்றது பாகிஸ்தான்…

Must read

துபாய்: சார்ஜாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியின்போது, நியூசிலாந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்தியாவை தோற்கடித்து  முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான், தற்போது 2வது வெற்றியை பெற்றுள்ளது.

ஷாா்ஜாவில் நேற்று இரவு  பாகிஸ்தான் நியூசிலாந்து இடையே போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் பாகிஸ்தான் மாற்றம் செய்ய வில்லை. நியூஸிலாந்து அணியில், காலில் காயம் கண்ட லாக்கி ஃபொகுசன் போட்டியிலிருந்து விலகியதால், ஆடம் மில்னே சோந்திருந்தாா்.

இதில் டாஸ்  வென்ற பாகிஸ்தான் பௌலிங்கை தோவு செய்ய, நியூஸிலாந்து மட்டையுடன் களமிறங்கயிது. நியூசிலாந்து அணியினி  தொடக்க வீரா் மாா்டின் கப்டில் 17 ரன்களுக்கு அவுட்டானாா். உடன் வந்த டேரில் மிட்செல் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 27 ரன்கள் சோத்தாா். இதனால் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் பவுலர்களின் பந்துக்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.

அவரைத் தொடர்ந்து மெட்சேல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.இந்நிலையில் வில்லியம்சன், டீவான் கான்வே இணை நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தது. டீவன் கான்வே 27 ரன்களிலும், வில்லியம்சன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ரவுஃப் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அதனையடுத்து, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகம்மது ரிஸ்வான், பாபர் ஆசம் களமிறங்கினர். பாபர் ஆசம் சௌத்தி பந்தில் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.  தொடர்ந்து  ஃபாகர் ஜமன் 11, முகம்மது ஹஃபீஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய முகம்மது ரிஸ்வான் 33 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணி சற்றே தடுமாறியது.  ஆனால், அதன்பிறகு ஆடிய  சோயப் மாலிக்  நிதானமாக ஆடி 26 ரன்களைக் குவித்தார். ஏழாவது வீரராக களமிறங்கிய ஆசிப் அலி இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடி 12 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 27 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

பாகிஸ்தான் 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

More articles

Latest article