ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் நினைவிடத்தில்  டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக மரியாதை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசும்பொருளாக மாறி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், துணை குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் , முதல்வர் ஸ்டாலின்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருவதாக கூறப்பட்டத. இந்த நிலையில்,  ஓபிஎஸ் காரில் செங்கோட்டையன் இணைந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இவர்களுடன் டிடிவி தினகரனும் இணைவார் என்று தகவல்ககள் பரவின. அதிமுகவில் நிலவும் சலசலப்புக்கு மத்தியில்,   பசும்பொன்னில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் சந்தித்துள்ளனர். தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், டிடிவி ஆகியோர் இணைந்து மரியாதை செலுத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படடது.

இந்த நிலையில், செங்கோட்டையன், ஒபிஎஸ் இணைந்து பசும்பொன் வந்த நிலையில், டிடிவி தினகரனும் அங்கு வந்துசேர்ந்தார். மூவரும் ஒருக்கொருவர் நலம் விசாரித்து கொண்டதுடன், அருகே இருந்த பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு சென்று ஒன்றாக அஞ்சலி செலுத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஓரணியில் இணைவதால் அதிமுகவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

முன்னதாக,  , முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சுமார் எட்டு மாதங்களுக்கும் மேலாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்ததுடன், பிரிந்து சென்றவர்களையும் கட்சியில் சேர்த்து, அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், எடப்பாடி செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்.

இநத் நிலையில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பசும்பொன் வரும் வகையில் செங்கோட்டையன் ஓ.பி.எஸ் உடன் இணைந்து பயணம் மேற்கொண்டார். பின்னர் டிடிவியையும் சந்தித்து, மூவரும் கூட்டாக தேவர் சமாதியில் மரியா செலுத்தினர்.

முன்னதாக,  பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் எதிர்க்கட்சி தலைவர் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபிறகு,   ஓ.பி.எஸ் மற்றும் செங்கோட்டையன் ஒரே காரில் பயணிப்பது குறித்து கேட்ட கேள்விகளுக்கு வந்தால் தான் தெரியும் அப்போதுதான் பதில் அளிப்பேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.