யக்குனர் கே.வி.ஆனந்த இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘கவன்’.

இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் டி.ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும்,  மடோனா செபாஸ்டின் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு  ‘ஹிப் ஹாப்’ ஆதி இசை அமைத்துள்ளார்.

இந்த படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடெபற்றது. அப்போது படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடல்கள் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டது.

அதில் ஒரு பாடலில்,  மகாகவி பாரதியார் இயற்றியுள்ள ‘தீராத விளையாட்டு பிள்ளை’ பாடல் மெட்டு மாற்றப்பட்டு ரீமிக்ஸ் செய்து  குத்துப்பாடலாக ‘ஹிப் ஹாப்’ ஆதி இசையமைத்துள்ளார்.

இந்த பாடலுக்கான காட்சியில், பாரதியாரையும், அவரது பாடலையும்  இழிவுப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அருமையான அந்த பாரதியாரின் பாடலை குத்துபாடலாக மாற்றி, மிக மட்டமாக காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.

இந்த பாடலுக்கு டி.ராஜேந்தரே வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு குத்தாட்டம் போட்டிருப்பது தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தமிழ் என்று அவ்வப்போது குரல் எழுப்பும் டி.ராஜேந்தர் எப்படி இந்த பாடலுக்கு நடனமாட ஒத்துக்கொண்டார் என்பது அனைவரின் ஆதங்கமாக உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, தான் தமிழன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட ஆதி, தற்போது பாரதியாரின் பாடலை குத்துபாடலாக மாற்றியிருப்பது தமிழுக்கு செய்யும் துரோகம்.

பாரதியாரை இழிவு படுத்தும் இந்த பட பாடல் இடம் பெற்றிருக்கும் கவன் படம் தமிழ் அறிஞர்களின் எதிர்ப்பை மீறி வெளியாகுமா? என்பது விரைவில் தெரிய வரும்.