உடல்நலகுறைவால் சிகிச்சைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்ற டி ராஜேந்தர் பூரண குண்டமடைந்துள்ளார் அவர் மேலும் சில நாள் அங்கு தங்கி ஓய்வு எடுப்பார் என்று தெரிகிறது.

இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என்றில்லாமல் பத்திரிகையாளர், பேச்சாளர், அரசியவாதி என்று பன்முக தன்மை கொண்டவர் டி. ராஜேந்தர். வயிற்றில் ரத்தக்கசிவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உயர்சிகிச்சைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார் அவருடன் அவரது மகனும் நடிகருமான சிம்பு மற்றும் குடும்பத்தினர் சென்றிருந்தனர்.

சிகிச்சைக்குப் பின் குணமடைந்த டி. ராஜேந்தர் அங்கு ஓய்வு எடுத்து வரும் அதேவேளையில் அங்குள்ள தமிழர்களை சந்தித்து வருகிறார்.

நடிகர் நெப்போலியன், பாண்டியராஜன் மற்றும் ஈழத்தமிழர்கள் என்று பலரையும் சந்தித்து வரும் டி. ராஜேந்தர் அவர்களுடன் உற்சாகமாக தனது வழக்கமான அடுக்குமொழியில் பேசி அசத்தி வருகிறார்.

டி ராஜாந்தரை சமீபத்தில் சந்தித்த முதியோர் மருத்துவரான கலை மற்றும் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் டி.ஆருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

மேலும், “இளமை என்பது இயற்கையின் கொடை, ஆனால் முதுமை என்பது ஒரு கலைப் படைப்பு. ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை வாழ முடியும் நீங்கள் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குகிறீர்கள்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.