டாமஸ்கஸ்

டும் பொருளாதார நெருக்கடியால் சிரியா ஊரடங்கைத் தளர்த்தி உள்ளது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனாவால் சிரியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது.   ஏற்கனவே போர்ச்சூழலால் கடும் பொருளாதார பாதிப்பு அடைந்துள்ள சிரியாவில் ஊரடங்கும் சேர்ந்ததால் பொருளாதார நெருக்கடி கடுமையாகி உள்ளது.   சிரியாவில் ஊரடங்கால் தொழில்கள் முடங்கி தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இழந்துள்ளனர்.

இதையொட்டி சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் பகல் நேரங்களில் மட்டும் ஊரடங்கைத் தளர்த்த முடிவு செய்துள்ளார்.  அதாவது ஊரடங்கை இரவு நேரத்தில் தொடரும் என அறிவித்துள்ளார்.   இதையொட்டி சிரியாவில் கடைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிகபட்டுள்து.  ஆயினும் பொதுச் சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சிரியா அரசு ”தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் நடுத்தர வ்ர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இப்போது ரம்ஜான் மாதம் என்பதால் அவர்களால் ஓரளவு பொருள் ஈட்ட முடியும்.   ஊரடங்கால் அது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே மக்களின் நலன் கருதி ஊரடங்கை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.